சினிமா செய்திகள்

ஹீரோயின் ஆகிவிட்டாரா ‘அரபிக்குத்து’ புகழ் ஜொனிதா காந்தி?

Published

on

கடந்த மூன்று நாட்களாக ’பீஸ்ட்’ படத்தின் பாடலான ‘அரபிக்குத்து’ பாடல்தான் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்து வரும் நிலையில் இந்த பாடலை அனிருத் உடன் பாடிய ஜொனிதா காந்தி தற்போது ஹீரோயின் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ’வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக ஜொனிதா காந்தி நடித்து வருகிறார். இந்த படத்தில் ’சூரரைப்போற்று’ படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்த கிருஷ்ணகுமார் என்பவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை விநாயக் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அரபிக்குத்து’ பாடல் வீடியோவில் ஜொனிதா காந்தி அனிருத்துடன் இணைந்து செம ஆட்டம் போட்டு இருப்பார் என்பதும் அந்த காட்சிகள் பார்ப்பதற்கு க்யூட்டாக இருந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அவர் நடித்துள்ள திரைப்படத்தில் அவரது நடிப்பும் க்யூட்டாக இருக்கும் என்று ரசிகர்கள் அந்த படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version