சினிமா செய்திகள்

திரைப்படத்தில் நடிக்கும் அண்ணாமலை: என்ன கேரக்டர் தெரியுமா?

Published

on

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திரைப்படத்தில் நடித்துள்ளதாகவும் அந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து பாஜகவை பரபரப்புடன் நடத்திவருகிறார் அண்ணாமலை என்பது தெரிந்ததே. ஆளுங்கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வரும் அண்ணாமலையை பார்த்து அமைச்சர்களே பயப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரபி என்ற கன்னட திரைப்படத்தில் அண்ணாமலை நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கே.எஸ்.விஸ்வாஸ் என்ற இரண்டு கைகளை இழந்த நீச்சல் வீரர் செய்த சாதனையை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கே.எஸ்.விஸ்வாஸ்க்கு நீச்சல் பயிற்சி யாளராக அண்ணாமலை நடித்துள்ளதாகவும் இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரே ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version