தினபலன்

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான சாய்பாபா பாடல்!

Published

on

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று ஷீரடி சாய்பாபா குறித்த பாடல் வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்த பாடல் வெளியானது.

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக பக்தி பாடல்களுக்கு இசையமைக்காத ஏ.ஆர். ரஹ்மான் தற்போது ஷீரடி சாய்பாபா குறித்த பக்தி பாடலுக்கு இசையமைத்துள்ளார். யூடியூபில் நேற்று வெளியான அந்த பாடல்கள் சாய்பாபா பக்தர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், ட்விட்டரில் ரஹ்மானிடம், எங்கள் மொழியில் சாய்பாபா பாடல் வராதா? என கன்னட ரசிகர் ஒருவர் கேட்க, உங்களது கோரிக்கை ஏற்கப்பட்டது என ரஹ்மான் அவருக்கு உடனடியாக பதிலளித்தார்.

இதனால், கன்னட மொழியிலும் விரைவில் இந்த பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version