தமிழ்நாடு
வரலாறு காணாத வளர்ச்சி அடையட்டும்: திமுக கூட்டணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து!
![A R Rahman Started Foundation For Tamil Music - Bhoomitoday A R Rahman Started Foundation For Tamil Music](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/rah.jpg)
தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் அடுத்தது திமுக ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது என்பதும் தெரிந்ததே. திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக போகிறார் என்பதும் பத்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திமுக ஆட்சி தமிழகத்தில் மலர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள திமுகவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். உலகநாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர்கள் விஷால் பார்த்திபன் உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை திமுகவுக்கும் திமுக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் சற்றுமுன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது டுவிட்டரில் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவுக்கு தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஏஆர் ரஹ்மான் அவர்கள் உடன் நெருக்கமாக இருந்தார் என்பதும் தெரிந்தது.
சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!????????????????????#tamilnadu
— A.R.Rahman (@arrahman) May 3, 2021