தமிழ்நாடு

இந்தி திணிப்பு: டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்திய ஏஆர் ரஹ்மான்!

Published

on

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக பரிந்துரைத்துள்ளனர். இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு இது தொடர்பான வரைவு கொள்கையை தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவிடம் கொடுத்திருந்தது. இந்த குழு தயாரித்த வரைவில் மும்மொழி கல்வி கொள்கையானது தாய் மொழியுடன் இணைப்பு மொழியான ஆங்கிலம் அவற்றுடன் வேறொரு மொழியான இந்தி இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதாவது, மூன்றாவது மொழி தேர்வு, மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக எதாவது ஒரு இந்திய மொழி இருக்க வேண்டும். இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க https://mhrd.gov.in என்ற இணையளத்தில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியியல் ஆய்வாளர்கள் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை nep.edu@nic.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழி என்ன என்று அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளநிலையில் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழி இந்தியாக மட்டும்தான் இருக்கும் என இந்தியை திணிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த இந்தி திணிப்புக்கு தமிழக அரசியல் கட்சி மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

தனது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பஞ்சாபி ஒருவர் மரியான் படத்தில் வரும் தமிழ் பாடல் ஒன்றை பாடியுள்ளதை பகிர்ந்து அதனுடன் பஞ்சாபில் தமிழ் பரவுகிறது என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ஹிந்தி கட்டாயமல்ல என்று வரைவு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதை வரவேற்று இந்த மாற்றத்தை வரவேற்கிறேன், தமிழகத்தில் இந்தி கட்டாயம் இல்லை என மும்மொழிக் கொள்கை வரைவில் திருத்தப்பட்டது அழகிய தீர்வு என ரஹ்மான் டுவீட் செய்தார்.

இதனையடுத்து மூன்றாவதாக ரஹ்மான் டுவீட் செய்துள்ள டுவீட் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அட்டானமஸ் என்னும் ஆங்கில வார்த்தைக்கு கேம்பிரிஜ் அகராதியில் என்ன பொருள் என்பதை பகிர்ந்துள்ளார் அவர். அட்டானமஸுக்கு தமிழில் தன்னாட்சி என்பது பொருள். ரஹ்மான் மத்திய அரசை கண்டிக்கும் விதமாகதான் இவ்வாறு கூறியுள்ளார் என விவாதம் சூடுபிடித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version