சினிமா செய்திகள்

விஜய்க்கு அடுத்து விக்ரமுடன் கைகோர்த்த ஏ.ஆர். ரஹ்மான்!

Published

on

இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், மெர்சல், சர்கார் மற்றும் பிகில் என தொடர்ந்து 3 விஜய் படங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்நிலையில், தற்போது, சியான் விக்ரம் படத்துக்கு இசையமைக்க கமீட் ஆகியுள்ளார்.

இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக சீயான் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தில் விக்ரமுக்காக ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

தற்போது, மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. கடாரம் கொண்டான் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு நயன்தாராவை நாயகியாக தேர்வு செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending

Exit mobile version