சினிமா செய்திகள்

முதல் முறையாக இணைகிறார்களா இயக்குநர் பாலா- ஏ.ஆர்.ரகுமான்..?

Published

on

இயக்குநர் பாலாவின் அடுத்தத் திரைப்படத்துக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இயக்குநர் பாலா நட்சத்திரங்கள் பலர் சூழ ஒரு திரைப்படத்தை இயக்கும் பணியில் உள்ளார். தற்போதைய சூழலில் நாயகர்கள் பட்டியலில் நடிகர்கள் அதர்வா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் உள்ளனர். இத்திரைப்படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு ஏதும் இதுவரையில் வெளியாகவில்லை.

இத்திரைப்படத்தின் கதையை நடிகரும் எழுத்தாளரும் ஆன வேல ராமமூர்த்தி எழுதி உள்ளார். இன்னும் சில கூடுதல் நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநர் பாலா உடன் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்தால் அது இரு தரப்பு ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விருந்து ஆக அமையும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version