சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ட்ரீட்- மகிழ்ச்சியில் அயலான் படக்குழு!

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுவதை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்துள்ள ட்ரீட் அயலான் படக்குழுவினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் வருகிற மார்ச் மாதம் வெளியாக உள்ளது. அடுத்ததாக அயலான் படம் வெளியீட்டுக்குத் தயாராகவே உள்ளது. ரவிக்குமார் இயக்கி உள்ள அயலான் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். அயலான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, இஷா கோபிகர், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அறிவியல் சார்ந்த படமான அயலான் ஏப்ரல் அல்லது மே மாதத்திலேயே திரை அரங்கில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. நாளை பிப்ரவரி 17-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் 36-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அயலான் படக்குழுவினர் சார்பில் ஏ.ஆர்.ரஹ்மான் ட்ரீட் ஆக நாளை அயலான் படத்தின் முதல் பாடல் வெளியிடப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது தனது தயாரிப்பிலேயே ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்காக கோயம்புத்தூரில் சிவகார்த்திகேயன் 40 நாட்கள் படப்பிடிப்பில் உள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version