சினிமா செய்திகள்

’பொன்னியின் செல்வன்’ படத்தில் எத்தனை பாடல்கள்: யார் யார் பாடலாசிரியர்கள்?

Published

on

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது என்பதும் இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராகி வரும் நிலையில் முதல் பாகம் அடுத்த ஆண்டும், இரண்டாவது பாகம் 2023ஆம் ஆண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் கேரக்டர் குறித்த புகைப்படங்கள் வெளியாகி இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்காக இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் 12 பாடல்களை கம்போஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த 12 பாடல்களில் 6 பாடல்கள் முதல் பாகத்திலும் ஆறு பாடல்கள் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த 12 பாடல்களில் 8 பாடல்களை இளங்கோ கிருஷ்ணன் என்பவர் எழுதியுள்ளார். மீதமுள்ள பாடல்களை கபிலன், கபிலன் வைரமுத்து மற்றும் வெண்பா ஆகியோர் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பிரமாதமாக படமாக்கப்பட்டு வருவதாகவும் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத பிரமாண்டங்களை இந்த பாடல்களைப் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மணிரத்னம் உருவாக்கிய படங்களிலேயே இந்த படம் தான் மிக அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் என்றும், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியதேவனாக கார்த்தி, ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, குந்தவையாக திரிஷா, பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் சரத்குமார், சிறிய பழுவேட்டரையர் கேரக்டரில் பார்த்திபன், நந்தினி ஆக ஐஸ்வர்யாராய், ஆழ்வார்க்கடியனாக ஜெயராம் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version