சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனிக்காக ஏ.ஆர்.முருகதாஸ் ரிலீஸ் செய்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Published

on

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ், விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பிச்சைக்காரன்’. இந்த திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் இந்த படம் மொத்தம் 45 கோடி வரை வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாகும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’பிச்சைக்காரன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

’பிச்சைக்காரன்’ திரைப்படம் சசியின் இயக்கத்தில் உருவான நிலையில் ’பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தை விஜய் ஆண்டனியே இயக்க உள்ளார் என்பதும் அவரே இசையமைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ’பிச்சைக்காரன்’ முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகமும் தமிழ் தெலுங்கு திரையுலகில் மிகப் பெரிய வெற்றியை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version