சினிமா

ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்: தமிழக அரசு!

Published

on

சர்கார் படத்தில் ஆளும் அதிமுக அரசின் நலத்திட்ட உதவிகளை விமர்சித்து காட்சிகளை வைத்த ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டுள்ளது.

மேலும், இனி வரும் காலங்களில் தான் எடுக்கவுள்ள படங்களில் அரசையோ, அரசின் நலத் திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக சர்கார் சர்ச்சை பெரிதாக கிளம்பிய நிலையில், இலவச மிக்ஸி, கிரைண்டர்களை ஏ.ஆர். முருகதாஸ் தூக்கி எறியும் காட்சி நீக்கப்பட்டது. அது போல ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளி பெயரையும் படத்தில் இருந்து மியூட் செய்து வெளியிட்டனர்.

ஆனாலும், அதுமட்டும் போதாது என்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் தற்போது கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version