தமிழ்நாடு

9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு: தமிழக அரசின் அதிர்ச்சி அறிவிப்பு

Published

on

கொரனோ வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்றும் 1 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு இன்றி ஆல்பாஸ் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது என்பதும் இது குறித்த அரசாணையும் வெளியானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது திடீரென 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு நடத்த தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது திறனாய்வு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ள தமிழக அரசு, மாணவர்களுக்கு கேள்விகளை அனுப்பி வாட்ஸ்அப் மூலமாக பதில்களை பெற முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன. 9 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்துவது தேவையில்லாதது ஒன்று என்றும் இது கிராமப்புற மக்களை பாதிக்கும் திட்டம் என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version