தமிழ்நாடு

புனிதவெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை ரத்து: தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு எந்த துறைக்கு?

Published

on

ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி மற்றும் 3-ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்கள் தொடர்ச்சியாக விடுமுறை என இருக்கும் நிலையில் இந்த மூன்று நாட்கள் விடுமுறை கருவூலக அலுவலகங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை அரசு விடுமுறை நாட்களிலும் கருவூலம் இயங்கும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கருவூலம் இயங்கவில்லை எனில் சம்பளம் உள்ளிட்ட அரசு செலவினங்களுக்கான பணப்பட்டுவாடாவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் தலைமை தேர்தல் அதிகாரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை முறை அமலில் இருப்பதால் தலைமை தேர்தல் அதிகாரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஏப்ரல் 2, 3, 4 ஆகிய மூன்று நாட்களும் மற்ற அலுவலகங்களுக்கு வழக்கம்போல் விடுமுறை உண்டு என்றும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. புனித வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் விடுமுறை ரத்து என்ற அறிவிப்பால் அரசு துறைகளுக்கு செல்லவேண்டிய பணப்பட்டுவாடா வழக்கம்போல் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version