வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயில் காலியிடங்கள் 1,30,000 உள்ளதால் வேலைக்கு விண்ணப்பியுங்கள்!

Published

on

இந்திய ரயில்வே நிறுவனத்தில் 1,30,000 காலியிடங்கள் உள்ளது. ரயில்வே பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி 23 – மார்ச் 1 ஆம் தேதியிட்ட வேலை வாய்ப்புச் செய்தித்தாளில் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

இந்திய ரயில்வேயில் சுமார் 16 லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். உலகில் உள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றான இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணித்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது.

மொத்த காலியிடங்கள்: 1,30,000

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

Level-1 Post:
1. Track Maintainer Grade IV
2. Gateman
3. Pointsman
4. Helper in Various Department(EE, Mech & Others)

காலியிடங்கள்: 1,00,000

Para-Medical Staff:
1. Staff Nurse
2. Health & Malaria Inspector
3. Pharmacist
4. ECG Technician
5. Lab Assistant
6. Lab Superintendent
Ministerial & Isolated Categories
7. Stenographer
8. Chief LaW Assistant
9. Jr Translator(Hindi)

காலியிடங்கள்: 30,000

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை கோரும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: 10, +2, ஐடிஐ, பட்டயம், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.500, இட ஒதுக்கீடு பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www. indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு: 04.03.2019

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/2/22/RRB_2019_Advt_130000_Posts.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி: 28.02.2019

seithichurul

Trending

Exit mobile version