தமிழ்நாடு

ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய ஏல விண்ணப்பம்: 48 வருடங்கள் கழித்து ஏலம்!

Published

on

ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரி படித்து முடித்தவுடன் வேலைக்காக எழுதிய விண்ணப்பம் தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பது தெரிந்ததே. ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளரான இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலைக்காக விண்ணப்பம் ஒன்றை எழுதி உள்ளார்.

பிற்காலத்தில் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஆவோம் என்று தெரியாமல் அவர் வேலைக்காக விண்ணப்பம் எழுதிய நிலையில் அந்த விண்ணப்பம் தற்போது 48 ஆண்டுகள் கழித்து ஏலத்துக்கு வந்துள்ளது. ஐக்கிய அமீரகத்தில் உள்ள ஏல நிறுவனம் ஒன்று இந்த விண்ணபத்தின் ஏலத்தை நடத்தியதாகவும் இந்த விண்ணப்பம் ரூபாய் 1.6 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் இந்த ஏலத்தை எடுத்தது யார் என்பது குறித்த தகவலை ஐக்கிய அரபு நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவன அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் எழுதிய விண்ணப்பம் ரூபாய் 11.6 கோடிக்கு ஏலம் போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .உலகின் முன்னணி பணக்காரர் ஆன ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் 47 ஆண்டுகளுக்கு முன் வேலை இல்லாமல் வேலைக்காக விண்ணப்பித்து இருந்தார் என்ற தகவல் இன்றைய இளைஞர்களுக்கு ஆச்சரியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version