தமிழ்நாடு

பி.எட் படிப்புக்கு விண்ணப்பம் செய்வது எப்போது? கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன என்பதும் புதிய மாணவர்கள் அட்மிஷன் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே.

ஏற்கனவே தமிழகத்தில் நேற்று நீட்தேர்வு நடந்துள்ள நிலையில் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி சட்டப் படிப்பு கல்லூரி உள்பட கிட்டத்தட்ட அனைத்து கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் வரவேற்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிஎட் படிப்புக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏழு அரசு கல்வியியல் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் செப்டம்பர் 22-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் வெளியிட்டுள்ளார். மேலும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய முடியாத மாணவர்கள் அருகில் உள்ள கல்வியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version