உலகம்

விபத்தில் காயமடைந்தவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

Published

on

விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிய ஒருவரை அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் எமர்ஜென்சிக்கு கால் செய்து காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த முகமது ஃபிட்ரிக் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத வகையில் வேன் ஒன்று அவரது இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதனை அடுத்து அவர் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் விழுந்து மயக்கமடைந்தார்.

இந்த நிலையில் அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உடனடியாக அவசர எண்ணுக்கு தகவல் அனுப்பியுள்ளது. மேலும் முகமது ஃபிட்ரிக் மயக்கமடைந்து இருக்கும் லொகேஷனையும் சேர்த்து அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவசர் எண்ணிலிருந்து காவல்துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டு காவல்துறையினர் விரைவாக அந்த பகுதியில் ஆம்புலன்ஸ் உடன் வந்தனர்.இதனையடுத்து முகமது ஃபிட்ரிக் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் குணமாகி வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச்சில் ஆபத்து காலங்களில் அவசர உதவியை பிரிவுக்கு தகவல் தெரிவிக்கும் எஸ்ஓஎஸ் என்ற வசதி உள்ளதை அடுத்து முகமது ஃபிட்ரிக் காப்பாற்றப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் வாட்ச்சில் உள்ள அவசர உதவி பிரிவின் பொத்தானை அழுத்துவதன் மூலம் அல்லது சில நேரங்களில் அதிர்வுகளால் தூண்டப்பட்டு அவசர உதவி எண்ணுக்கு தானாகவே தகவல் அனுப்பப்படும் என்றும் லொகேஷன் அனுப்பிவைக்கப்படும் வசதியும் இதில் உள்ளது என்றும் கூறப்பட்டது.

ஆப்பிள் வாட்ச் என்பது ஆடம்பரத்ற்கு அணியப்படுவது என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த ஆப்பிள் வாட்ச் ஒரு நபரின் உயிரையே காப்பாற்றி உள்ளது என்பதால் இது அத்தியாசமானது என்பதும் புரிய வருகிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version