தொழில்நுட்பம்

ஃபால் டிடெக்ஷன் மூலம் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச் 4.!

Published

on

ஆப்பிள் வாட்ச் 4 இல், பயன்படுத்தப்படும் “லைப் சேவிங்” மோடு அம்சத்தினால் 34 வயதுடைய பெரியவர் ஒருவர் தக்க நேரத்தில் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் 4 அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச்சில் ஏராளமான உடல்நல அம்சங்கள் சேர்க்கப்ட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தனது அறிமுக விழாவில் தெரிவித்திருந்தது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் வீட்டில் தனியாக சமைத்துக் கொண்டிருந்த நேரத்தில் எரிந்துகொண்டிருக்கும் அடுப்பின் அருகிலேயே சுயநினைவிழந்து கீழே விழுந்துவிட்டார். ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் 4 இல் சேர்க்கப்பட்டுள்ள “ஃபால் டிடெக்ஷன்” அம்சம் அவர் கீழே விழுந்ததை உணர்ந்து, வாட்ச் மூலம் அவரின் உறவினர் மற்றும் அவசர உதவிக்கும் அழைப்புகளை விடுத்து அவரைக் கைப்பற்றியுள்ளது.

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் 4 இல் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஃபால் டிடெக்ஷன் அம்சம், வாட்ச்சில் உள்ள ஆசியிலேரோமீட்டர் மற்றும் கிரோஸ்கோப் சென்சார்கள் மூலம் செயல்படுகின்றது. இந்த சென்சார்களால் 32 ஜி போர்ஸ் வரை கணக்கிட்ட முடியும். கீழே விழப்பட வேகத்தைக் கணக்கிட்டு பயனரின் உடலில் அடிப்பட வாய்ப்புள்ளதா என்பதைக் கணக்கிட்டு வாட்ச் உருமாயாளருக்கு செய்தியை அனுப்புகிறது.

வாட்ச் உரிமையாளருக்கு இந்தச் செய்தி உடனே அனுப்பப்படுகின்றது. பயனருக்குக் கிடைத்த ஃபால் டிடெக்ஷன் செய்தியை பயனர் பாதிப்பு எதுவும் இல்லையெனில் நிராகரிக்கலாம். ஆப்பிள் வாட்ச் கணித்து அனுப்பப்பட்ட செய்திக்கு உரிமையாளரிடம் இருந்து பதில் கிடைக்காத பட்சத்தில், அவரின் உடலின் எந்த ஒரு அசைவும் இல்லாத தருணத்தில் செய்து அனுப்பிய 60 வினாடிகளில், ஆப்பிள் வாட்ச் தானாகவே அவசர உதவிக்கும் மற்றும் அதன் உரிமையாளரின் உறவினர்களுக்கும் அவசர அழைப்புகளை அனுப்பி உதவிக்கு அழைக்கிறது.

இந்த ஃபால் டிடெக்ஷன் சேவையை அந்த நபர் தனது ஆப்பிள் வாட்ச்சில் ஆக்டிவேட் செய்து வைத்திருந்ததினால் தக்க தருணத்தில் உதவிக் கிடைத்து உயிர் காப்பாற்ற பட்டுள்ளார். ஆப்பிள் வாட்ச் பயன்படுத்தும் உரிமையாளர்களில் 35 வயது முதல் 65 வயது வரை உடையவர்களுக்குக் கட்டாயம் இந்தச் சேவை ஆக்டிவேட் செய்யும்படி ஆப்பிள் நிறுவனம் வழியுறுத்தியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version