வணிகம்

கோயம்புத்தூருக்கு வரும் பிரபல போன் தயாரிப்பு நிறுவனம்.. எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்?

Published

on

அமெரிக்காவை தலைமையிடாக கொண்டு செயல்பட்டு வரும் போன் அசம்பிளிங் நிறுவனமான ஃப்லெக்ஸ் கோயம்புத்தூரில் தங்களது ஆலையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஃப்லெக்ஸ் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு முக்கிய சப்ளையராக உள்ளது. மோட்டோரோலா மற்றும் லெனோவா நிறுவனம் போன்களை உற்பத்தி செய்தும் வருகிறது.

இந்தியாவில் சென்னை, புனே உள்ளிட்ட இடங்களில் ஃப்லெக்ஸ் நிறுவனத்துக்கு ஏற்லன்வே ஆலைகள் உள்ளன. இப்போது கோயம்புத்தூரில் தங்களது ஆலையை அமைத்து வருகிறது.

கோயம்புத்தூரில் அமைக்கப்பட உள்ள ஃப்லெக்ஸ் தொழிற்சாலையில் ஷிப்ட்டுக்கு 800 முதல் 1000 பணியாளர்கள் வரை வேலை செய்வார்கள். இதனால் கிட்டத்தட்ட 2000 முதல் 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃப்லெக்ஸ் தொடர்ந்து பிரபல் ஐபோன் உற்பத்தி நிறுவனமான பெகட்ரானும் கோயம்புத்தூரில் தங்களது கிளையைத் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version