தொழில்நுட்பம்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் விற்பனைக்கு வந்தது.!

Published

on

ஆப்பிள் நிறுவனத்தின், புதிய ஆப்பிள் எக்ஸ்.ஆர் ஐபோன் விற்பனை இன்று முதல் இந்திய சந்தையில் துவங்குகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

முக்கிய நகரங்களில் இருக்கும் பெரிய ஆப்பிள் ஸ்டோர்களில் நிச்சயம் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்குமென்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் போன்களை ஆப்பிள் இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ப்ரீ-ஆர்டர் செய்தால் மூன்று முதல் ஐந்து நாட்களில் கிடைக்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே மனவருத்தம், இன்னும் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் போன்னிற்கு உரிய அதிகாரப்பூர்வ மொபைல் கேஸ்களை வெளியிடாதது தான். இன்னும் ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் போனிற்கான கிளியர் கேஸ் ஆன்லைன் மற்றும் ஸ்டோர்களில் விற்பனைக்காகக் கொண்டுவரப்படவில்லை. இதுதான் ஆப்பிள் ரசிகர்களுக்கு ஒரு சிக்கலாக தற்பொழுது அமைந்துள்ளது.

விலை:

– ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் – 64ஜிபி வேரியண்ட் ரூ.76,990.

– ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் – 128 ஜிபி வேரியண்ட் ரூ.81,900.

– ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் – 256 ஜிபி வேரியண்ட் ரூ.91,900.

 

 

seithichurul

Trending

Exit mobile version