உலகம்

கூகுளை அடுத்து இந்தியாவுக்கு உதவி செய்யும் ஆப்பிள் நிறுவனம்!

Published

on

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இதனை அடுத்து இந்தியாவுக்கு மருத்துவ உதவிக்காக உதவிகள் குவித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுக்கு மருந்து பொருட்கள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பல பொருள்களையும் நிதி உதவியும் செய்து வருகின்றன.

இந்த நிலையில் ஏற்கனவே கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு 135 கோடி மதிப்புள்ள மருந்துப் பொருட்களையும் அனுப்ப முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் கூகுளை அடுத்து தற்போது ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவுக்கு நன்கொடை அளிக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரனோ தீவிரமாக பரவி வருவது தனது கவலை அளிப்பதாகவும் ஆப்பிள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கவனமும் இந்தியாவின் மீது இருக்கும் என்றும் இந்தியாவில் உள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் தொற்றை எதிர்த்து போராடி வரும் மக்கள் மீதுதான் தங்களது கவனம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆப்பிள் தனது ஆதரவை இந்தியாவுக்கு தெரிவித்துள்ளதோடு எவ்வளவு தொகை அளிக்கும் என்பதை இன்னும் ஓரிரு நாளில் தெரிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version