உலகம்

துருக்கி, சிரியா மக்களுக்கு கைகொடுத்த சுந்தர் பிச்சை, டிம் குக்.. என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்?

Published

on

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய நிலநடுக்கங்க சந்தித்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் காரணமாக இரு நாட்டின் பொருளாதாரம் சீர்குலைத்துள்ளது. இந்த நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் ஆகியோர், துருக்கி, சிரியா மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளில் வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுமார் 6,000க்கும் அதிகமானவர்கள் உயிர் இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகி உள்ளதை அடுத்து இந்த மீட்பு பணியை முடிக்கவே பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கும் முதல் நாடாக இந்தியா உதவி செய்துள்ள நிலையில் சீனா உள்பட மற்ற அனைத்து நாடுகளும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு உதவி செய்ய பெரிய நிறுவனங்களும் முன்வந்துள்ளன. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய போது ’துருக்கி சிரியா நாட்டில் பேரிடரில் சிக்கித் தவித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். மேலும் அந்த பகுதி மக்களுக்கு கூகுள் நிறுவனம் தொடர்ந்து SOS அலர்ட் உதவிகளை வழங்கும் என்றும் மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கூகுள் வழங்க தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் டிக் குக் தனது டுவிட்டர் பக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆப்பிள் உடன் இருக்கும் என்றும் பேரிடர் மீட்பு பணியில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்ற நிறுவனங்களும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளதாகவும் பல நிறுவனங்கள் மருந்து பொருட்கள் உணவுப் பொருள்கள் ஆகியவற்றை அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலகிலேயே மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக துருக்கி நிலநடுக்கம் கருதப்பட்டு வரும் நிலையில் இந்தியா பட உலக மக்கள் துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு கை கொடுத்து உதவி வருவது பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version