தமிழ்நாடு

தமிழகத்தில் இ-பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு முக்கியத் தகவல்!

Published

on

தமிழ்நாட்டில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்து உள்ளார்.

இது பற்றி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, ‘காகிதமில்லாத வகையில் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து கூடி பேசி வருகிறோம். அப்படி இ-பட்ஜெட் தாக்கல் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று பேசி வருகிறோம்.

நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நம்முடைய சட்ட மன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி கொடுக்கலாமா என்றும், அப்படிச் செய்வதன் மூலம் சபை நடவடிக்கைகளை திறம்பட கையாள முடியுமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். அப்படி மாற்றுவதன் மூலம் ஆகும் செலவு குறித்தும், அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசி வருகிறோம்’ என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே இ-பட்ஜெட் முறையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளபட்டன. ஆனால், திமுக அதைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டி வருகிறது. புதிய அரசின் முதல் பட்ஜெட்டே இ-பட்ஜெட்டாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version