தமிழ்நாடு

ஐந்து மாநில தேர்தலில் வெற்றி பெறுவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது யார் யார் என்பது குறித்த கருத்துகணிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் எடுத்த இந்த கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணி 161 முதல் 169 இடங்கள் வரை வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அதிமுக கூட்டணி 53 முதல் 61 இடங்களில் வெல்ல வாய்ப்பு என்றும் அறிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கூட்டணி 6 தொகுதிகள் வரையிலும் அமமுக கூட்டணி 5 தொகுதிகள் வரையும் வெல்ல வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளது.

புதுவையில் என்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ரங்கசாமி முதல்வர் ஆவார் என்றும் அவரது கட்சிக்கு 16 முதல் 20 இடங்கள் கிடைக்கும் என்றும் திமுக-காங்கிரஸ் கூட்டணி 10 முதல் 14 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

Kerala CM's Tamil tweet on Gaja relief is the best you can see today!கேரளாவில் இடதுசாரிகள் 85 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு 62 தொகுதிகள் வரையிலும் வெல்லும் என்றும் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. எனவே இந்த மாநிலத்தில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி அமைக்கிறது. மேலும் இம்மாநிலத்தில் பாஜகவுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே வெல்ல வாய்ப்பு என்று கூறியுள்ளது.

தமிழகத்தில் திமுகவும் புதுவையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியும் கேரளாவில் இடதுசாரிகளும் வெல்லும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version