சினிமா செய்திகள்

‘தளபதி 65’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை!

Published

on

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’ திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது என்பதும் இந்த பூஜை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே இந்த பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் தான் வேறு ஒரு படப்பிடிப்பில் இருப்பதாகவும் வருத்தத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பூஜாவை தவிர இந்த படத்தில் இன்னொரு நாயகி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர் இன்று இந்த பூஜையிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல மலையாள நடிகை அபர்ணாதாஸ் என்பவர்தான் ‘தளபதி 65’ படத்தில் இணைந்துள்ளார். இவர் மலையாளத்தில் வெளியான பிரகாஷம் மற்றும் மனோகரம் ஆகிய இரண்டு படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் இந்த இரண்டு படங்களும் மலையாளத்தில் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடதக்கது.

தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அபர்ணாதாஸ் நடிக்க இருப்பதாகவும் அவருடைய கேரக்டர் தான் படத்தின் மையப் புள்ளி என்றும் கூறப்படுகிறது. தமிழில் முதல் படத்திலேயே விஜய்யுடன் நடிக்க ஒப்பந்தமானது தனக்கு மிகப்பெரிய பெருமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version