தமிழ்நாடு

ஓபிஎஸ் – ஈபிஎஸ்-ஸுக்கு எதிராக மேலும் ஒரு நிர்வாகி அதிமுகவில் போர்க்கொடி – சசிகலா கை ஓங்குகிறதா?

Published

on

அதிமுக நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து சர்ச்சைக்குரிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் எம்.பி-யுமான அன்வர் ராஜா.

கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ள அன்வர் ராஜா, ‘அதிமுக தொண்டனைப் பொறுத்தவரை அவன் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் விசுவாசியாக இருப்பான். அவன் எப்போதும் தேர்தல் பிரச்சாரங்களை உற்று நோக்குவான்.

புரட்சித் தலைவரின் பெயரை அதிமுக கூட்டங்களில் சொல்கிறார்களா, புரட்சித் தலைவியின் பெயரை கூட்டங்களில் சொல்கிறார்களா என்பைதை அவன் பார்ப்பான். அவர்கள் பெயர்கள் ஒதுக்கப்பட்டால் தேர்தலில் அவன் உங்களையும் ஒதுக்கி விடுவான்.

இது தான் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் நடந்தது. அம்மாவின், புரட்சித் தலைவரின் பெயர்கள் ஒதுக்கப்பட்டன. அதிமுக அடிப்படைத் தொண்டனும் கட்சியை ஒதுக்கி மாற்றுக் கட்சிக்கு ஓட்டு போட்டு விட்டான்’ என்றார்.

அவரின் இந்தக் கருத்து அதிமுக வட்டாரங்களில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக செல்லூர் ராஜூ அன்வர் ராஜாவிட் கருத்துக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார்.

Trending

Exit mobile version