கிரிக்கெட்

கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ஆகிறார் ராகுல் டிராவிட் மகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு

Published

on

இந்தியாவின் தடுப்புச் சுவர் என்று போற்றப்பட்ட ராகுல் ராவிட் கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் செய்துள்ள நிலையில் தற்போது அவரது மகன் கர்நாடக ஜூனியர் அணிக்கு கேப்டன் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன்கள் இருவருமே கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள்.

ராகுல் டிராவிட் மகன்கள் சமித் மற்றும் அன்வே ஆகிய இருவரும் கர்நாடக மாநிலத்தில் மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடி வரும் நிலையில் தற்போது அவரது இளைய மகன் அன்வே, 14 வயதிற்கு உட்பட்ட கர்நாடக அணியின் கேப்டன் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டும் இன்றி ராகுல் டிராவிட் போலவே அன்வே, விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் வரும் 23ஆம் தேதி முதல் தென்மண்டல ஜூனியர் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு கர்நாடகா அணியின் கேப்டனாக அன்வே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில கிரிக்கெட் போர்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே ராகுல் டிராவிட்டின் மூத்த மகன் சமத் இதே 14 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அணியில் அன்வே கடந்த சில மாதங்கலாக மிகவும் சிறப்பாக விளையாடினார் என்றும், குறிப்பாஇக அவர் விக்கெட் கீப்பிங் செய்வதில் திறமையானவர் என்றும் பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில் தற்போது அவர் கேப்டன் ஆகி, கர்நாடக மாநில ஜூனியர் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவர் இந்திய அணியிலும் இணைய அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

Trending

Exit mobile version