சினிமா

மீண்டும் ஸ்லிம்மாகும் முயற்சியில் அனுஷ்கா!

Published

on

நடிகை அனுஷ்கா உடல் எடையை குறைக்கும் முயற்சியில் வெளிநாட்டில் தீவிர மருத்துவ ஆலோசனை மற்றும் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

டோலிவுட்டின் லேடிசூப்பர்ஸ்டார் அனுஷ்கா, நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி, பாகுபலி, பாகமதி படங்களை தொடர்ந்து தற்போது எந்த புதுப்படத்திலும் கமீட் ஆகவில்லை.

பல புதிய கதைகளும் அனுஷ்காவை தேடி வரும் சூழலில், தற்போதைக்கு எந்த கதையையும் அவர் ஓகே சொல்வதில்லை. இதற்கு தடையாக இருப்பது அவரது எடை மட்டும் தான் என்கிறார் அனுஷ்கா.

’நான் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறேன். பல பெரிய படங்களில் இருந்து நடிக்க எனக்கு அழைப்பு வருகிறது. உடல் எடையை அவர்கள் பெரிதாக நினைக்கவில்லை என்றாலும், அந்த கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைத்தாக வேண்டியது எனது கடமை. இதனால், வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவர்களின் ஆலோசனைப்படி எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். விரைவில் பழையபடி எடை குறைந்த அனுஷ்காவாக உங்களுக்கு காட்சித் தருவேன்’ என அனுஷ்கா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version