சினிமா செய்திகள்

Anushka Shetty: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு நோயா?

Published

on

சமீப காலமாக முன்னணி நடிகைகள் தங்களின் உடல்நலம் குறித்து ரசிகர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். சமந்தா மற்றும் ஸ்ருதி ஹாசன் myositis மற்றும் PCOS குறித்து அதிக விழிப்புணர்வை கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுடன் நடிகை அனுஷ்காவும் இணைந்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் நடிகை அனுஷ்கா. தெலுங்கில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்ட அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன், சிங்கம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் தேவசேனாவாக நடித்து அனைத்து தரப்பிலும் பாராட்டைப் பெற்றார். அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு வெளிவந்த நிசப்தம் படம் தான் அவர் கடைசியாக நடித்த படமாகும்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் தனக்குள்ள அரிய வகை நோய் குறித்து பேசியுள்ளார். “எனக்கு சிரிப்பதை நிறுத்த முடியாத நோய் உள்ளது!  சிரிப்பது ஒரு பிரச்சனை என்று நீங்கள் நினைக்கலாம்? ஆனால் எனக்கு அது பிரச்சனை தான், ஏன்னென்றால் நான் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரித்துக்கொண்டே இருப்பேன். நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போதோ அல்லது படமெடுக்கும்போதோ, நான் தரையில் உருளும் அளவிற்கு சிரித்துக்கொண்டே இருப்பேன். அதனால் படப்பிடிப்பு பலமுறை நிறுத்தப்பட்டுள்ளது.” என்று கூறியிருந்தார் நடிகை அனுஷ்கா.

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா, மகேஷ் பாபு இயக்கத்தில் ‘அனுஷ்கா 48’ படத்தில் நடிக்கிறார். அனுஷ்காவுடன் , ‘ஜாதி ரத்னாலு’ புகழ் நவீன் பாலிஷெட்டி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது . இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version