சினிமா செய்திகள்
’அஜித் 61’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அனுஷ்கா? ஆனால் ஜோடி இல்லையாம்!
அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் இந்த படம் குறித்த புதுப்புது தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
ஏற்கனவே இந்த படத்தில் நாகார்ஜூனா மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும் இருவரும் காவல்துறை அதிகாரியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது .
இந்த நிலையில் தற்போது பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இல்லை என்றும் கூறப்படுகிறது .
நடிகை அனுஷ்கா ஏற்கனவே அஜித்துடன் ’என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இணைய உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் அனுஷ்கா நடிப்பது குறித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.