சினிமா

சந்திரமுகி 2வில் அனுஷ்கா? – மீண்டும் ஒரு ரவுண்டு வருவாரா?…..

Published

on

தமிழில் ரெண்டு திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் அனுஷ்கா. ஆனால், அப்படம் தோல்வியை சந்திக்கவே, தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே நடிக்க துவங்கினார். தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.தெலுங்கில் இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றியை பெறவே பல தயாரிப்பாளர்களும் அவரை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டனர்.

அனுஷ்கா நடித்த அருந்ததி திரைப்படம் ஆந்திராவில் மெஹா ஹிட் படமாக அமைந்தது. அதோடு, தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது. எனவே, தமிழிலும் அவர் நடிக்க துவங்கினார். அவர் நடித்த வேட்டைக்காரன், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய திரைப்படங்கள் வெற்றியை பெற்றது.

aunthathi

ஆனால், இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்து குண்டாக மாறினார். ஆனால், மீண்டும் உடல் எடையை அவரால் குறைக்க முடியவில்லை. பாகுபலி படத்தில் கூட சில காட்சிகள் கிராபிக்ஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அவரை படக்குழு அணுகியுள்ளது. இப்படத்தில் வடிவேலுவும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.வாசு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version