சினிமா செய்திகள்

ஸ்பானிஷ் பட ரீமேக்கில் கமீட்டான அனுஷ்கா!

Published

on

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அனுஷ்கா, தற்போது ஸ்பானிஷ் பட ரீமேக் ஒன்றில் நடிக்க கமீட் ஆகியுள்ளார்.

ஜூலியாஸ் ஐ என்ற ஸ்பானிஷ் ஹாரர் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்க உள்ளனர். இந்த படத்தில் பேயுடன் போராடும் கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அருந்ததி, பாகமதி என ஹாரர் வகை படங்களில் நடித்து அந்த படங்களை வெற்றிப்படமாக்கியவர் அனுஷ்கா, இந்த படத்திற்கும் அனுஷ்கா கச்சிதமாக பொருந்துவதால், அவரை நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இயக்குநர் கபீர்லால் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

சைலன்ஸ் படத்தில் நடித்து வரும் அனுஷ்கா, அந்த படத்திற்கு பின்னர், ஜூலியாஸ் ஐ ரீமேக்கில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version