தமிழ்நாடு

கோவை மேயர் தேர்தலில் பெண் கல்லூரி அதிபர் போட்டியா? கமல் திட்டம்!

Published

on

கோவை மேயர் தேர்தலில் பெண் கல்லூரி அதிபர் ஒருவரை போட்டியிட வைக்க கமல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்பட மொத்தம் 21 மாநகராட்சிகளின் மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சென்னை திருச்சி கோவை மதுரை என 10 முக்கிய மாநகராட்சிகளில் மட்டும் மேயர் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் ஏற்கனவே கமல் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை மக்கள் நீதி மையம் பெற்றிருப்பதால் கோவை மேயர் தேர்தலில் கல்லூரி அதிபர் அனுஷா ரவி என்பவரை போட்டியிட வைக்க கமல் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கோவை மேயர் தேர்தலில் திமுக வேட்பாளராக கமல் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டாக்டர் மகேந்திரன் போட்டியிடலாம் என்றும் ஒருவேளை அவர் போட்டியிடாவிட்டாலும் திமுக வேட்பாளருக்கு மிகத் தீவிரமாக வேலை செய்வார் என்றும் அவருக்கு சவால் விடும் வகையிலேயே அனுஷா ரவியை கமல் தேர்வு செய்ததாகவும் மக்கள் நீதி மய்யம் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அனுஷா ரவி கோவை மேயர் தேர்தலில் மேயரை நேரடியாக தேர்வு செய்யும் தேர்தலாக இருந்தால் மட்டும் போட்டியிடுவார் என்றும் கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யும் தேர்தல் என்றால் அவர் போட்டியிட மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version