சினிமா செய்திகள்

அகோரியாக மாறிய அனுபமா பரமேஸ்வரன்?

Published

on

அழகாய் இருந்த அனுபமா பரமேஸ்வரன், அகோரி போன்று போட்டோஷாப் செய்யப்பட்ட தனது புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அந்த புகைப்படத்துடன் தக் லைஃப் என்ற வாசகத்தையும் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். செல்போன் கேமராக்களில், தக் லைஃப் என்றால் வரும் கண்ணாடி, சுருட்டு, பெரிய தங்க செயின் சகிதமாக அனுபமா தனது போட்டோவை எடிட் செய்துள்ளார்.

அவரது அழகான கூந்தலுக்கு பதிலாகவும், அகோரியின் கோர முடியை வைத்து எடிட் செய்திருப்பது பார்க்கவே சகிக்கவில்லை அனுபமா என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்யும் அளவிற்கு உள்ளது.

நல்லாதானே இருந்தீங்க ஏன் இப்படி மாறீட்டீங்க என்றும், புதுப்படத்திற்கான கெட்டப்பா? என்றும் சில ரசிகர்கள் கமெண்ட் செய்து கலாய்த்தும் வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version