சினிமா செய்திகள்

அதர்வாவுடன் ஜோடி சேர்ந்த அனுபமா பரமேஷ்வரன்!

Published

on

கொடி படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு தமிழ் சினிமாவில் கமீட் ஆகியுள்ளார், மலையாள நடிகை அனுபமா பரமேஷ்வரன். நடிகர் அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அனுபமா.

பூமராங் படத்தை இயக்கிய கண்ணன் இயக்கத்தில், மீண்டுமொரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அதர்வா. பூமராங் படம், சிறப்பாக இருந்தாலும், கத்தி படத்தின் சாயல் அப்பட்டமாக இருந்தது என்ற விமர்சனங்கள் எழுந்தன. படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், அதர்வாவுக்கு ஒரு நல்ல இமேஜ் மற்றும் ஓரளவு வெற்றியை பூமராங் பெற்றுத் தந்தது.

இந்நிலையில், மீண்டும் ஒருமுறை பூமராங் இயக்குநர் கண்ணனுடன் கைகோர்த்துள்ளார் அதர்வா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஷ்வரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தனுஷின் கொடி படத்திற்கு பிறகு அனுபமா நடிக்கவுள்ள தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version