சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியின் அடுத்த பட ஹீரோயின்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published

on

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படம் தொடங்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் 50 சதவீதம் முடிந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதியின் 46 வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் அனுகீர்த்தி வாஸ் என்பவர் நாயகியாக நடிக்க உள்ளார். இவர் மிஸ் பெமினா இந்தியாவில் கலந்து கொண்டு முதல் இடத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வருகை இந்த படத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் ’சேதுபதி’ மற்றும் ’செக்கச்சிவந்த வானம்’ படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்சேதுபதி போலீஸ் கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த போலீஸ் கேரக்டரில் சீரியஸ் அதிகம் இருக்காது என்றும் காமெடியான கேரக்டர் என்றும் இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அனேகமாக அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version