தமிழ்நாடு

முதல்வரை சந்தித்த லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத்துறை டிஜிபி: வேலுமணி விவகாரம் குறித்து ஆலோசனையா?

Published

on

இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றும் வருமான வரித் துறையினர் இணைந்து சோதனை செய்து வரும் நிலையில் சற்று முன்னர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு துறை டிஜிபி கந்தசாமி அவர்கள் சந்தித்தார். இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நடைபெற்றதாகவும் இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிராக பல்வேறு ஆதாரங்கள் சிக்கி உள்ளதால் அவரிடம் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆதாரங்கள் இன்னும் வலுவாக இருந்தால் அவரை கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு பக்கம் காலை முதல் வேலுமணி வீட்டில் நடந்து வரும் சோதனை, இன்னொருபக்கம் லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி முதல்வருடன் சந்திப்பு ஆகியவை தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் வேலுமணி மட்டுமின்றி ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் யாரும் தப்ப முடியாது என திமுக வட்டாரங்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version