தமிழ்நாடு

ஸோஹோ ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி பரபரப்பு புகார்: அதிர்ச்சியளிக்கும் இன்னொரு பக்கம்!

Published

on

பிரபலமான சாஃப்ட்வேர் நிறுவனமான ஸோஹோவின் இணை நிறுவனரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஸ்ரீதர் வேம்பு குறித்து அவரது மனைவி பிரமிளா பரபரப்பான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

#image_title

சுமார் 5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புள்ள ஸோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா தெரிவித்துள்ள குற்றச்சாட்டில், ஸ்ரீதர் வேம்பு உடனான 29 ஆண்டு கால குடும்ப வாழ்க்கையில் என்னையும் ஆட்டிசம் குறைபாடு உள்ள எங்களுடைய மகனையும் தவிக்க விட்டுவிட்டு, கடந்த 2020-ஆம் ஆண்டில் கலிஃபோர்னியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டார்.

மகனின் ஆட்டிசம் நோயோடு போராடி வரும் சூழலில், மூன்றாண்டு காலமாக என்னையோ எனது மகனையோ சந்திக்க வரவேயில்லை. இதனையடுத்து கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் அவரிடமிருந்து விவாகரத்து கேட்டு முறையிட்டேன். இந்த சூழலில், எங்கள் இருவருக்கும் பொதுவான சொத்துக்களை எனக்கே தெரியாமல் அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு மாற்றியுள்ளார்.

இதன்மூலம் எனக்கு ஜீவனாம்சம் மிகக் குறைவாகக் கிடைக்கும் படி செய்துள்ளார். எனக்கும் எனது மகனுக்கும் துரோகம் இழைத்துள்ளார். கலிஃபோர்னியா சட்டப்படி, கணவன் மனைவிக்கு இடைப்பட்ட சொத்துக்களை இன்னொருவருக்கு கை மாற்றுவது தவறு என குறிப்பிட்டுள்ளார் பிரமிளா.

பிரமிளாவின் இந்த பரபரப்பு குற்றச்சாட்டு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஸ்ரீதர் வேம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், எனது மனைவிக்கும் மகனுக்கும் சொகுசான வாழ்க்கை வாழ்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறேன். சொந்தமாக வீடு, எனது மூன்றாண்டு கால அமெரிக்க சம்பளம் அனைத்தும் மனைவிக்கே அளித்துள்ளேன்.

மகனின் ஆட்டிசம் பாதிப்பால் கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன், அவனுக்கு இந்தியாவில் நல்லதொரு சூழலை ஏற்படுத்த விரும்பினேன், ஆனால் அதற்கு மனைவி ஒத்துழைக்கவில்லை. எனது சித்தப்பா ராம் தான் எனது மனைவியின் மனதில் நஞ்சை விதைத்து இப்படி பேச வைக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

Trending

Exit mobile version