உலகம்

பாகிஸ்தானில் மீண்டும் ஒரு இந்து கோவில் தகர்ப்பு!

Published

on

பாகிஸ்தானின் சிந்த் பகுதியில் மிண்டும் ஒரு இந்துக் கோவில் இடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்து கோவில் தகர்ப்புக்கு கடும் திஎர்ப்பு தெரிவித்துள்ள, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாகிஸ்தானிய மனித உரிமை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அனிலா குல்ஜர், “பாகிஸ்தானிலிருந்த 428 கோவில்களில், 20 மட்டுமே தற்போது உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் சிந்த் மாகானதில் உள்ள கரியோ கஹன்வர் பகுதியில் உள்ள இந்துக் கோவில் ஒன்று சனிக்கிழமை தகர்க்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில் அதில் ஒன்றாக இதுவும் உள்ளது.
பல முறை இந்து பெண்கள் உட்படப் பிற மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர்கள் இந்த பகுதியில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள் சீக்கியர்கள், அகமதியாக்கல், ஷியாக்கள் சிறுபான்மையினர்களாக உள்ளனர். சிறுபான்மையினரைப் பலவந்தப்படுத்தி இஸ்லாமியர்களாக மாற்றப்படுவதும் அதிகளவில் அரங்கேறி வருகிறது.

இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு, சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாட்டைக் காட்டி வருகிறது என்றும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Trending

Exit mobile version