சினிமா செய்திகள்

அருள்நிதிக்கு இன்னொரு டிமாண்டி காலனியா? கே13 விமர்சனம்!

Published

on

அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கே13 விமர்சனம் இதோ உங்களுக்காக..

அறிமுக இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், காயத்ரி, ஆதிக் ரவிச்சந்திரன், யோகி பாபு, எருமைசாணி விஜய், காக்கா முட்டை மணிகண்டன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் தான் கே13.

வித்தியாசமான திரைகதைகளை தேடி படமாக்கி வரும் அருள்நிதி, இம்முறையும் அதே முயற்சியில் இறங்கியுள்ளார்.

சாம் சி.எஸ். இசை த்ரில்லர் படத்துக்கு ஏற்றார் போல, எங்கே சைலன்ஸ் இருக்க வேண்டும், எங்கே சத்தம் இருக்க வேண்டும் என்பதை அறிந்து பின்னியுள்ளார்.

கதைக்களம்:

இரண்டாவது படம் கமீட் ஆகிய தனது நண்பன் காக்கா முட்டை மணிகண்டன் வைக்கும் பார்ட்டிக்கு ஃபுல் போதையில் செல்கிறார் நாயகன் அருள்நிதி. அங்கே தனியாக பார்ட்டி செய்யும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை கரெக்ட் பண்ண வழிகிறார். ஆனால், இவரை கரெக்ட் பண்ண நினைக்கும் ஷ்ரத்தாவின் கனவு பலிக்கிறது. எல்லை மீறும் நாயகனிடம், இங்கே வேண்டாம் என் இடத்துக்கு போகலாம் என கே 13 ஃபிளாட்டுக்கு கூட்டிச் செல்கிறார் ஷ்ரத்தா. காலையில் எழுந்து பார்த்தால் கட்டிப்போட்ட நிலையில் நாயகன் கிடக்கிறார். பின்னாடி பார்த்தால், கையறுத்து ரத்த வெல்லத்தில் செத்து கிடக்கிறார் ஷ்ரத்தா.

ஷ்ரத்தாவை யாராவது கொலை செய்தார்களா? அல்லது அது தற்கொலையா என்ற சஸ்பென்ஸை கிளைமேக்ஸில் உடைக்கும் இயக்குநர், கடைசி 2 நிமிடத்தில் இது டோட்டலா வேற கதை என வைக்கும் ட்விஸ்ட் சினிமா ரசிகர்களை கவர்கிறது.

பொறுமையாக நகரும் திரைக்கதை மற்றும் டிமாண்டி காலனி போல ஒரே அறைக்குள் நகர்ந்தாலும், பெரிதாக எந்தவொரு சர்ப்ரைஸும் இல்லாமல் படம் செல்வதால், பல இடங்களில் தூக்கம் வருகிறது.

கைகளில் கட்டியிருக்கும் துணியை முகத்தில் கட்டிக் கொண்டு தப்பித்து இருக்கலாமே என தியேட்டரில் பலர் கூறும் சத்தம் இயக்குநருக்கு கேட்டால் சரி.

யோகிபாபுவை வைத்தே ஆகவேண்டும் என்ற நிலைமை இந்த படத்திலும் தொடர்கிறது ஒரு நிமிட காட்சிக்கு மட்டும் கொரியர் பாயாக வந்து செல்கிறார்.

காயத்ரி, ஆதிக் ரவிச்சந்திரன் போர்ஷன் படத்தில் திருப்புமுனையாகவும், கே 13 அறையில் நடக்கும் அந்த மர்மமான விசயங்களுக்கு விடையாகவும் இருப்பது ஆறுதல்.

மொத்தத்தில் சினிமா கனவை சுமந்து கொண்டிருந்த ஒரு இயக்குநரின் கருத்துக்கும் கதைக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம் தான் இந்த கே13.

பட்ஜெட் கம்மிய படம் பண்ணனும்னு இயக்குநர் தயாரிப்பாளர் சொன்னதை படத்தில் வைத்திருக்கும் இடமும் சூப்பர்.

சினி ரேட்டிங்: 3/5.

seithichurul

Trending

Exit mobile version