சினிமா செய்திகள்

அக்‌ஷய்குமாரை தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாகும் இன்னொரு பாலிவுட் நடிகர்!

Published

on

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்திருந்தார். இந்நிலையில், தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சுனிஷ் ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் படங்களில் ஹீரோவாக நடித்து வந்த சுனில் ஷெட்டி, சமீப காலமாக குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சாம் நடிப்பில் வெளியான 12 பி படத்தில், ஜோதிகாவுக்கு வீட்டில் பார்க்கப்படும் மாப்பிள்ளையாக 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தமிழ் படத்தில் சுனில் ஷெட்டி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version