செய்திகள்

நேதாஜியின் பிறந்தநாள் பராக்கிரம தினமாக அறிவிப்பு

Published

on

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை ஆண்டுதோறும் பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வரும் 23 ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை கொல்கத்தாவில் வெகுவிமர்சையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவிற்கு பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர்  பிரகலாத் ஜோஷி கூறியதாவது:

நேதாஜியின் 125-வது பிறந்தநாள், இந்த ஆண்டு முதல் பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும். கொல்கத்தாவில் முதலாவது பராக்கிரம தினம் கொண்டாடப்படும். இதனையொட்டி தேசிய நூலக வளாகத்தில் கண்காட்சி நடைபெறவிருக்கிறது. மேலும் கொல்கத்தாவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் அவரது வாழ்கை வரலாற்றை கேன்வாஸ் துணியில் ஓவியமாகத் தீட்ட உள்ளனர். அவரது வீரத்தையும் இந்நாட்டுக்கு அவர் செய்த அர்பணிப்புகளையும் பறைசாற்றும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்கென பிரதமர் மோடி தலைமையில் 85 உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

Trending

Exit mobile version