சினிமா செய்திகள்

’அண்ணாத்த’ படத்தை கைப்பற்றிய உதயநிதி: ‘எனிமி’ ரிலீஸ் ஆகுமா?

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி பெற்றிருப்பதால் இந்த படத்திற்கு சுமார் 1000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் அதனால் விஷால், ஆர்யா நடித்த ’எனிமி’ தீபாவளி அன்று ரிலீஸ் ஆவது சந்தேகம் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரும் தீபாவளியன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’, விஷாலின் ’எனிமி’ மற்றும் சிம்புவின் ’மாநாடு’ ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் ’மாநாடு’ தீபாவளி ரிலீஸில் இருந்து விலகிக் கொண்டது என்பதும் நவம்பர் 25 ஆம் தேதி ரிலீஸ் தேதி என தயாரிப்பாளரால் அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் விஷாலின் ’எனிமி’ படம் தீபாவளிக்கு கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டதோடு புரமோஷன் பணிகளும் நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 1050 திரையரங்குகளில் சுமார் 800 முதல் 900 திரையரங்குகள் ’அண்ணாத்த’ படத்திற்கு கிடைக்கும் என்றும் 100 முதல் 150 திரையரங்குகளில் மட்டுமே ’எனிமி’ படத்துக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது

இந்த நிலையில் ’எனிமி’ படத்தின் தயாரிப்பாளர் தங்களது திரைப்படத்திற்கு 250 திரையரங்குகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக ’அண்ணாத்த’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் ’அண்ணாத்த’ படத்திற்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ’எனிமி’ படம் ரிலீஸாவது சந்தேகம்தான் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து ’எனிமி’ தயாரிப்பாளர் அடுத்த கட்ட நடவடிக்கையை என்ன எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version