சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாரின் ‘அண்ணாத்த’: எஸ்பிபி பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், சற்று முன்னர் ‘அண்ணாத்த’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

‘அண்ணாத்த’ படத்தில் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய சிங்கிள் பாடல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என சற்று முன்னால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. மேலும் இது குறித்து வெளியான போஸ்டர் ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தங்களை தாங்களே பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு வதந்திகளை பரப்பி வரும் யூடியூப் சேனல்காரர்கள் சமீபத்தில் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது என்றும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்றும் வதந்தியை பரப்பினர். அந்த வதந்தியை முறியடிக்கும் வகையில் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி அன்று ரிலீசாகும் என்று இன்று வெளியாகி இருக்கும் போஸ்டரில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கிள் பாடல் ரிலீஸ் மற்றும் தீபாவளி ரிலீஸ் ஆகிய செய்திகள் ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version