சினிமா செய்திகள்

அண்ணாத்த விமர்சனத்தை காணவில்லை: டிவிட்டரில் புகார் அளித்த புளூசட்டை மாறன்!

Published

on

அண்ணாத்த விமர்சனத்தையே ட்ரெண்டிங்கில் காணவில்லை என ப்ளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் ஒரே நாளில் 35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில் விமர்சகர்கள் மற்றும் இந்த படத்தை வெளுத்து வாங்கி வருகின்றனர். முழு சட்டை மாறன் உள்பட பல விமர்சகர்கள் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் ஒருபடி மேலே போய் ரஜினியை தனிப்பட்ட முறையிலும் தாக்கியுள்ளார். ரஜினி சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது கூட அண்ணாத்த படத்தின் புரமோஷனுக்காக தான் என்றும் அது மட்டுமின்றி ரஜினியை தனிப்பட்ட முறையில் பலவாறு தாக்கிப் பேசி இருந்தார்.

இதனை அடுத்து அண்ணாத்த திரைப்படத்தின் அவருடைய விமர்சனம் டிரெண்டிங்கில் இருந்த நிலையில் திடீரென தூக்கப்பட்டு விட்டது. அதற்கு முன்னர் பதிவு செய்த ஜெய்பீம் திரைப்படமும் எனிமி திரைப்படமும் யூடியூப் ட்ரெண்டிங்கில் இருக்கும்போது அண்ணாத்த திரைப்படத்தின் விமர்சனம் மட்டும் டிரெண்டில் காணவில்லை என்றும் யார் செய்த வேலை என்றும் பெரியவர் செய்தால் பெருமாள் செய்ததுபோல கூறுவார்களே அது போலவா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாத்த படத்தை நெகட்டிவ்வாக விமர்சனம் செய்வது கூட தவறில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு நபரை விமர்சனம் செய்ததால் தான் டிரெண்டிங்கில் இருந்து தூக்கப்பட்டு இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version