சினிமா செய்திகள்

’அண்ணாத்த’ படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் இளமையாகவும் ஸ்டைலாகவும் அட்டகாசமாகவும் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பதும், சமூக வலைதளங்களில் டிரெண்டில் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து காத்திருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது.

ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் என்பதும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version