சினிமா செய்திகள்

’அண்ணாத்த’, ‘விக்ரம்’ ஒரே நாளில் ரிலீஸா? பரபரப்பு தகவல்

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ரஜினிகாந்த் இணைந்தார் என்பதும் அவரது சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நாட்களில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த மாத இறுதிக்குள் இந்த படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு அதன்பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் திட்டமிட்டபடியே தீபாவளி அன்று இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இது குறித்து அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் என்று அறிவித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் தீபாவளி அன்று வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் நீண்ட இடைவெளிக்குப்பின் ரஜினி-கமல் ஆகியோர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Trending

Exit mobile version