தமிழ்நாடு

இரண்டில் எது உண்மையான பிரஸ் கிளப்?

Published

on

இரண்டு போராட்டங்கள்! இரண்டும் சென்னை பிரஸ் கிளப் பெயரில். எது உண்மையான பிரஸ் கிளப்?

சமீபத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது செய்தியாளர் ஒருவரை அவமதித்ததாக கூறும் செய்தியாளர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர் சென்னை பத்திரிகையாளர் சார்பில் நடைபெறும் இந்த போராட்டம் இரண்டு விதமாக நடைபெற்று வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது

என்னிடம் கேள்வி கேட்ட சகோதர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்தேன். அவரை வைத்து அறிவாலயம் கட்சியிடம் நல்ல பெயர் எடுக்க ஆர்ப்பாட்டம் செய்து உள்ளனர்!

அதிக அளவில் செய்தியாளர்களை கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு தான் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினை திமுக வழங்கும் என எதிர்பார்கின்றேன். விமலேஷ்வரனா? பாரதி தமிழனா? அணிகள் கைப்பற்ற போவது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினை. அரசியல் விளையாட்டுக்களை பொறுத்திருந்து பார்ப்போம்

எனது பேச்சு நியாயம் என்று கருதி போராட்டத்தினை புறக்கணித்த உண்மை செய்தியாளர்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்!

 

seithichurul

Trending

Exit mobile version