தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்கள் கைது: கரூரில் பெரும் பரபரப்பு!

Published

on

நேற்று பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்ட அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இன்று கரூரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தலைவராக இருந்த எல் முருகன் அவர்கள் சமீபத்தில் மத்திய அமைச்சரானதை அடுத்து தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நேற்று நியமனம் செய்யப்பட்டார். இன்று அவர் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அண்ணாமலை பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து கரூரில் அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாடினர். பேருந்து நிலையங்களில் இனிப்புகள் கொடுத்தும் பட்டாசு வெடித்தும் அண்ணாமலை ஆதரவாளர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த போது திடீரென காவல்துறையினர் வந்து அனுமதி இன்றி கொண்டாட்டம் நடைபெறக் கூடாது என்று தடுத்தனர். இதனால் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை அடுத்து அனுமதியின்றி பட்டாசு வெடித்து கொண்டாடியதற்காக அண்ணாமலை ஆதரவாளர்களை கைது செய்வதாக காவல்துறையினர் அறிவித்தனர். ஆனால் கைதாகாமல் பாஜகவினர் தகராறு செய்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக பட்டாசு வெடித்து கொண்டாடியவர்களை கைது செய்தனர்.

நேற்று பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்ட அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இன்று கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version