தமிழ்நாடு

பானிபூரி வாலா… திமுக தான் இதற்கு காரணம்: அண்ணாமலை விளாசல்!

Published

on

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவி வருகிறது. இந்த வதந்தியை பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்துக்கு திமுக தான் காரணம் என சாடியுள்ளார். திமுக அமைச்சர் பானிபூரி வாலா என கூறியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#image_title

இது தொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது. தமிழ் மக்களாகிய நாங்கள், “உலகம் ஒன்று” என்ற கருத்தை நம்புகிறோம், எங்கள் வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும் கேவலமான வெறுப்பையும் ஆதரிக்கவில்லை.

ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய மில்ஸ் அசோசியேஷன் ஆகியவை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வாறு தங்கள் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளனர் மற்றும் அவர்களின் நலனை உறுதிப்படுத்த அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கி அறிக்கை ஒன்றை ஏற்கனவே வெளியிட்டுள்ளனர்.

உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் தொழில் மற்றும் சேவைத் துறையில் புலம்பெயர்ந்த நமது சகோதர, சகோதரிகளின் பங்களிப்பை தமிழ்நாட்டின் பொது மக்கள் ஏற்றுக்கொண்டு வரவேற்கின்றனர். ஆனால், வட இந்தியர்களைப் பற்றி திமுக எம்பிக்களின் கீழ்த்தரமான கருத்துக்கள், திமுக அமைச்சர் அவர்களை பானிபூரி வாலா என்று அழைத்தது மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சியினர் அவர்களை வெளியேற்றக் கோருவது இன்று நாம் பார்ப்பதைத் தூண்டியுள்ளது.

திமுக மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை மக்களும், அரசும், காவல்துறையும் ஆமோதிப்பதில்லை. இப்போது இந்த நிலையை சரிசெய்வது திமுகவின் பொறுப்பாகும் என கூறியுள்ளார் அண்ணாமலை.

Trending

Exit mobile version